அட்லீ உதவி இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் மொழி படங்களை கடந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்த படத்தை தொடங்கவுள்ளார். அதன்படி, அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கத்தில் துல்கர் சல்மான் புதிய தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு 'கோலி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்சன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இந்தாண்டு மே மாதத்தில் துவங்குகிறது என்கிறார்கள்.