நான்காவது முறையாக தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி
ADDED : 1 days ago
பாலிவுட்டில் நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் 'ராஞ்சனா', 'அட்ராங்கி ரே', 'தேரே இஸ்க் மே' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே வரவேற்பை பெற்றன. குறிப்பாக இந்த கூட்டணியில் கடந்தாண்டு வெளிவந்த தேரே இஸ்க் மே படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தனுஷ், ஆனந்த் எல் ராய் நான்காவது முறையாக புதிய படத்திற்காக இணைகின்றனர். இந்த படம் பிரீயட், ஆக்சன், டிராமா கதைகளத்தை மையப்படுத்தி உருவாகும் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இவர்களின் முந்தைய மூன்று படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். அந்தவகையில் நான்காவது முறையாக இந்த படத்திலும் ரஹ்மானே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.