தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி
மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'தி ராஜா சாப்'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
இருந்தாலும் முதல் நாளில் 112 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் 'பாகுபலி 2' 214 கோடி, கல்கி 2898 ஏடி 191 கோடி, சலார் 178 கோடி, ஆதி புருஷ் 140 கோடி, சாஹோ 130 கோடி முதல்நாளில் வசூலித்துள்ளன.
அவற்றுடன் ஒப்பிடும் போது 'தி ராஜா சாப்' படம் குறைவான வசூலையே பெற்றுள்ளது. தெலுங்கில் மட்டும் இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு உள்ளது. மற்ற மொழிகளில் இப்படத்திற்கான விமர்சனம் மோசமாக உள்ளது.
படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், 'தில்லுக்கு துட்டு, அரண்மனை' ஆகிய படங்களின் கலவையாக இந்தப் படத்தை எடுத்துள்ளதாகக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.