10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி
கடந்த 2016ம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'தெறி'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் விஜய், அட்லி கூட்டணி முதல்முறையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெறி படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களைக் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி பொங்கல் அன்று ஜன., 15ல் தெறி படம் ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படம் வெளியாக வேண்டியது. சென்சார் பிரச்னையால் படம் வெளியாகாத சூழலில் தெறி படத்தின் ரீ ரிலீஸை அவரது ரசிகர்கள் வரவேற்க தயாராகி உள்ளனர். இதனிடையே விஜயின் மெர்சல் படமும் சில இடங்களில் இன்று ரீரிலீஸாகி உள்ளது.