உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்த தோல்விகள்: அப்செட்டில் நித்தி அகர்வால்

அடுத்தடுத்த தோல்விகள்: அப்செட்டில் நித்தி அகர்வால்


தமிழில் ரவி மோகனுடன் 'பூமி', சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். ஆனால், இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. அதேபோல் உதயநிதி ஜோடியாக நடித்த 'கலகத்தலைவன்'ம் ஹிட் ஆகவில்லை. தமிழில் விட்டதை தெலுங்கில் பிடிப்போம் என அங்கே கவனம் செலுத்தினார்.

பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரிஹர வீரமல்லு' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு பவன் கல்யாண் அரசியல் பிரவேசம் காரணமாக லேட்டானது. சில ஆண்டுகளுக்குபின் படம் வெளியாகி தோல்வியை தழுவியது. நித்தி அகர்வால் அப்செட் ஆனார். அடுத்து பல வெற்றிகள் கொடுத்த பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜா சாப்' படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான அந்த படத்துக்கும் கலவையான விமர்சனங்களே வந்துள்ளன.

தி ராஜா சாப் படத்தில் நித்தி அகர்வால் பாடல்காட்சியை புகழ்பவர்கள், பேய் கதையை திட்டுகிறார்கள். வரிசையாக இப்படி படங்கள் தோல்வியை சந்திக்கிறதே? இந்த ஆண்டாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று சபதம் செய்து இருக்கிறாராம் நித்தி அகர்வால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !