வாசகர்கள் கருத்துகள் (2)
பான் இந்தி(எதிர்ப்பு)யா படம் 51 வெறும் கோடி தானா ?
நூறு கோடி
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரவிமோகன், அதர்வா முரளி ஸ்ரீலீலா நடித்த ‛பராசக்தி' படம் ஜனவரி 10ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் ஆகவும், நெகட்டிவ் ஆகவும் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் இருதினங்களில் 51 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூல் சாதனை படைத்துள்ளது. பொங்கலுக்குள் 100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆகாததால் விஜய் ரசிகர்கள், பராசக்தி குறித்து சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இது படத்தின் வசூல் மற்றும் வெற்றிக்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பராசக்தி படத்தின் வெற்றி விழா நாளை காலை சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதை வெற்றி விழாவாக அல்லாமல் நன்றி அறிவிப்புகளாக நடத்துகிறார்கள்.
சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா மற்ற நடிகர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு படம் குறித்தும் படத்தின் மீதான சர்ச்சைகள் குறித்தும் விளக்கம் அளித்து பேச உள்ளனர். படம் வெளியான மூன்று நாளில் வெற்றி விழா என்பது தெலுங்கு சினிமாவில் அதிக நடக்கும் இப்போது தமிழ் சினிமாவிலும் அதிகம் நடக்கிறது. நன்றி அறிவிப்பு விழா மூலம் பப்ளிசிட்டி ஏற்பட்டால் அது படத்தின் வசூலுக்கு உதவியாக இருக்கும் , படத்தில் மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவதூறு தகவல்களுக்கு பதிலடியாக இருக்கும் என்றும் பட குழு நம்புகிறது.
பான் இந்தி(எதிர்ப்பு)யா படம் 51 வெறும் கோடி தானா ?
நூறு கோடி