உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து

''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து


ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் அவரது ரசிகர்கள் அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக திரண்டு வாழ்த்து பெறுகின்றனர். சில சமயம் அவர் வெளியூர்களில் ஷூட்டிங் சென்றிருந்தால் மட்டும் ரசிகர்களை சந்திப்பது தடைபடும்.

அந்த வகையில் இன்று தன் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து கூறினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ''அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும். முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்குகிறது. அது கமர்சியல், என்டர்டெயின்மென்ட் படம், நன்றி'' எனக் கூறினார்.

பின்னர் மகள்கள், மருமகன், பேரன்கள் ஆகியோருடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார் நடிகர் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !