உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய்

முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய்


பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் அவரது நண்பர்களான எஷான் மற்றும் லாய் ஆகியோர் பாடகர்களாக, இசை ஆல்பம் உருவாக்குபவர்களாக இருந்து பின்னர் 1999ல் 'சூல்' என்கிற பாலிவுட் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள். தமிழில் கமல் நடித்த 'ஆளவந்தான்' மற்றும் 'விஸ்வரூபம்' என இரண்டு படங்களுக்கு மட்டுமே இவர்கள் இசையமைத்துள்ளார்கள். அதே சமயம் பாலிவுட்டில் பிசியாக இசையமைத்து வரும் இந்த கூட்டணி தற்போது முதன் முறையாக மலையாளத்தில் உருவாகியுள்ள 'சத்தா பச்சா' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தை அத்வைத் நாயர் என்பவர் இயக்கியுள்ளார். அர்ஜூன் அசோகன், ரோஷன் மேத்யூ, விசாக் நாயர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜனவரி 22ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சங்கர் மகாதேவன், ''கடந்த 30 வருடங்களில் எங்களுக்கு மலையாளத்தில் இசையமைக்க ஒரு சில வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவை எதுவும் முழுமை பெறவில்லை. அந்த வகையில் இந்த சத்தா பச்சா திரைப்படம் எங்களுக்கு மலையாளத்தில் முதல் வரவேற்பை கொடுத்துள்ளது'' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !