உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல்

'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல்


கடந்த 2021ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்பு வரை சில படங்களின் தோல்விகளால், சர்ச்சைகளால் துவண்டு கிடந்த சிம்புவுக்கு இந்த படத்தின் வெற்றி திருப்புமுனையாக அமைந்தது. அதே சமயம் இந்த படம் தயாராகி வந்த வேளையில் மிகப்பெரிய பிரச்னைகளை சந்தித்தது. ஒரு கட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படம் கைவிடப்பட்டதாக கூட தயாரிப்பாளர் விரத்தியுடன் அறிவித்தார். அதன்பிறகு மீண்டும் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பராசக்தி பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சிவகார்த்திகேயன் மாநாடு படம் பற்றி ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்: மாநாடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து படம் கிட்டத்தட்ட சில பிரச்னைகளால் கைவிடப்பட்ட நிலையில் என்னை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படத்தை துவங்கலாம் என ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த படத்தில் சிலம்பரசன் நடித்தால்தான் அது மிகப்பெரிய வெற்றியை பெரும் என மாநாடு படக்குழுவினரிடமும் உறுதியாக தெரிவித்து அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டேன். அதன் பிறகு அந்த படம் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !