சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால்
மலையாளத்தில் இளம் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், ரோஷன் மேத்யூ, விசாக் நாயர் ஆகியோர் நடித்துள்ள படம் சத்தா பச்சா. வரும் ஜனவரி 22ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அத்வைத் நாயர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் மலையாள திரையுலகில் முதன்முறையாக அடி எடுத்து வைத்துள்ளார்கள் இசையமைப்பாளர் சங்கர் எசான் லாய் கூட்டணி. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் டிக்கெட்டை மோகன்லால் பெற்றுக்கொண்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் துவங்கி வைத்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினருடன் சேர்ந்து வெளியிட்டுள்ள மோகன்லால், “இந்த படத்தில் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நடித்துள்ளார்” என்று படத்தின் பிரமோஷனில் தன்னை இணைத்துக் கொண்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் மம்முட்டி ஒரு கெஸ்ட் ரோலிங் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது. அதனால் அவர் குறிப்பிட்ட நண்பர் மம்முட்டி தான் என்று தற்போது ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.