டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1 days ago
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியான ஜனகண மன என்கிற படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. அதன்பிறகு இவர் நிவின்பாலியை வைத்து இயக்கிய மலையாளி ப்ரம் இந்தியா படம் இவருக்கு கை கொடுக்கவில்லை.
தற்போது இவர் டொவினோ தாமஸ் நடிப்பில் பள்ளிச்சட்டம்பி என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக டிராகன் புகழ் கயாடு லோகர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவருக்கு இது முதல் படம். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த படம் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இருக்கிறது. இந்த நிலையில் வரும்ஏப்-9ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.