பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்'
ADDED : 11 hours ago
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவர் ஜெயதேவி. இவரது படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட்டில் எளிய முறையில் எடுக்கப்பட்டதாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் 'பாசம் ஒரு வேசம்'. சு சமுத்திரம் எழுதிய 'சோற்றுப் பட்டாளம்' என்ற நாவலை தழுவி இந்தப் படம் உருவானது. திரைக்கதையை ஜெயதேவி எழுதினார் வசனத்தை சமுத்திரம் எழுதினார்.
வேலு பிரபாகரன் ஒளிப்பதிவு செய்தார், ஷியாம் இசையமைத்தார். ரஞ்சனி, மாதுரி, டிஸ்கோ சாந்தி, வினு சக்கரவர்த்தி, நாசர், தியாகு உள்ளிட்ட பலர் நடித்தனர். இயற்கையான ஒளியில் படமாக்கப்பட்ட ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. மிகச் சரியாக திட்டமிட்டு ஐந்து நாளில் எடுக்கப்பட்ட படம். என்றாலும் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.