உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள்

ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள்

'கல்லூரி', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'பரதேசி' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவர் இயக்கிய 'டூ லெட்' படம் பல விருதுகளை பெற்றது. திரைப்படம் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது பிலிம் ஸ்கூல் என்ற திரைப்பட பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவரது திரைப்படப் பள்ளி மாணவர்கள் 34 பேர் 'வழித்துணை', 'சுழற்சி', 'மத்தி', 'உறுதுணை', 'அடவி', 'கிடை', 'சேவ் த கேட்', 'மயில', 'செல்போன்', 'அருகன்', 'கிடை', 'லகடு', 'ரைடர்', 'குடை வள்ளல்', 'மியாவ்', 'நேற்றைய நிலா', 'தணல்', 'வார் கிட்ஸ்', 'தாழ்', 'கூடு', 'பசி', 'தீவிரவாதி', 'கண்ணாயிரம்', 'ஓட்டம்', 'தம்மம்' 'பழகு', 'மோகன மதில்', 'நிசப்தம்', 'கடைசி எல்லை', 'மௌனி', 'தாழ்' என 34 சுயாதீன படங்களை இயக்க உள்ளனர்..

இந்தப் படங்கள் மற்றும் இயக்குனர்களின் அறிமுக விழா வருகிற 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !