இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பாலிவுட் சினிமா மதச்சார்பு உடையதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் நடந்த அதிகார மாற்றத்தால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என கூறி இருந்தார். ரகுமானின் இந்த கருத்து சர்ச்சை ஆனது.
இதற்கு விளக்கம் அளித்த ரஹ்மான் ''யாரையும் புண்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்'' என தெரிவித்து இருந்தார். என்றாலும் ரஹ்மானுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால் அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்க கூடாது. இது ஒரு கேரக்டர் அசாஸினேஷன். உலக அளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞரை அவமானப்படுத்துவது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு” என பதிவிட்டு இருக்கிறார்.