உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா

விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா


நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கு கொடுக்கப்பட்ட 'நேஷனல் கிரஷ்' என்கிற பட்டத்திற்கு ஏற்ப சினிமாவை தாண்டி நிகழ்ச்சிகளிலும் பொதுவெளியிலும் ரசிகர்களிடம் இயல்பாகவும் அன்பாகவும் பழகும் குணம் கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். குறிப்பாக விமான நிலையத்தில் பயணத்திற்காக வரும்போதெல்லாம் புகைப்படக்காரர்கள் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டால் அவர்களை தவிர்க்காமல் அவர்களுக்கு போஸ் கொடுத்து, சில கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒருவர் அருகில் இருந்த போட்டோகிராபரை சுட்டிக்காட்டி, இவருக்கு இன்று பிறந்தநாள் என்று குறிப்பிட்டார். நடந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா இதைக் கேட்டு ஒரு நொடி அப்படியே நின்று அந்த போட்டோகிராபரை அழைத்து அன்புடன் கட்டி அணைத்து 'காட் பிளஸ் யூ' என்று கூறி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரிடம் உங்களுக்கு 'இது எத்தனையாவது பிறந்தநாள்?' என்று கேட்க, 24 என்று வெட்கத்துடன் சொன்னார் அந்த போட்டோகிராபர். உடனே ஐயோ என்று க்யூட்டான ஒரு ரியாக்சன் கொடுத்தபடி அங்கிருந்து பயணத்திற்கு கிளம்பி சென்றார் ராஷ்மிகா மந்தனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !