உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா வாழ்க்கை முழுமை பெற்றது ; ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் அனஸ்வரா ராஜன்

சினிமா வாழ்க்கை முழுமை பெற்றது ; ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் அனஸ்வரா ராஜன்


மலையாள திரை உலகில் கடந்த சில வருடங்களாகவே துறுதுறுப்பும் இளமை துடிப்புமாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் நடிகை அனஸ்வரா ராஜன். ராங்கி, தக்ஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் முழுமையான கதாநாயகியாக தமிழில் நடித்துள்ள வித் லவ் என்கிற திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க, மதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பு பிரிமியர் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. மகளின் படம் என்பதால் இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார். அப்போது தனது பெற்றோருடன் இந்த பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த அனஸ்வரா ராஜன் ரஜினிகாந்த் உடன் தனது பெற்றோர் இருவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் இது குறித்து அனஸ்வரா ராஜன் வெளியிட்டுள்ள பதிவில், படையப்பாவில் இடம் பெற்ற 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு' பாடலை குறிப்பிட்டு, “சினிமாவில் என்னுடைய அப்பாவின் பேவரைட் ஹீரோ ரஜினி சார். இப்போது அவரை நேரில் சந்தித்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட அந்த புன்னகையை என்னால் மறக்க முடியாது. வித் லவ் படத்தின் பிரிமியர் ஷோவில் தலைவரை சந்தித்தது சினிமா வாழ்க்கை முழுமை அடைந்தது போல உணர்வைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !