உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தப்பாவுக்காக வழி விட்டு ஒதுங்கினாரா ராம்சரண்?

சித்தப்பாவுக்காக வழி விட்டு ஒதுங்கினாரா ராம்சரண்?


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில் அடுத்ததாக தற்போது தான் நடித்து வரும் 'பெத்தி' திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்குகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் மார்ச் 27ம் தேதி வெளியாவதாக இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதியை மாற்றி ஏப்ரல் 30க்கு வெளியாகும் என புதிய அறிவிப்பை பெத்தி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால் ராம்சரணின் சித்தப்பா பவன் கல்யாண் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நடித்து வந்த 'உஸ்தாத் பகத்சிங்' படமும் ஒரு வழியாக வேலைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் தனது படத்தை பெத்தி படத்திற்காக குறிக்கப்பட்டிருந்த தேதியில் ரிலீஸ் செய்ய பவன் கல்யாண் விரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து தனது சித்தப்பாவுக்காக ராம்சரண் தனது பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்புகளும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !