குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
ADDED : 212 days ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் பராசக்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. வருகிற ஏழாம் தேதி இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்போது தனது இரண்டு மகன்களுக்கும் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். இது குறித்து புகைப்படத்தை சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை மனமே என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.