உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம்

விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம்


ஹிந்தியில் 'அனிமல்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிப்பில் புராண படமாக உருவாகி வருகிறது 'ராமாயணா'. இதில் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்ல சன்னி தியோலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் விபீஷணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் பாலிவுட் நாளிதழ் ஒன்றுக்கு விஜய்சேதுபதி அளித்த பேட்டியில், “ராமாயணா படத்தில் விபீஷணனாக நான் நடிக்கவில்லை. அங்கிருந்து எனக்கு அப்படி எந்த ஒரு அழைப்பும் இதுவரை வரவில்லை” என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !