உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன்

பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன்


இயக்குனர் கவுதம் மேனன், 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. 'மின்னலே' படமும் கூட, வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல அவரது இயக்கத்தில் விக்ரம் நடித்த, நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' படமும் ரிலீஸை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. ஒரு பக்கம் படங்கள் இயக்குவது குறைந்தாலும் 'விடுதலை, லியோ' உள்ளிட்ட சில பெரிய படங்களில் கவுதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ''பொருளாதார பிரச்னைகள் சிக்கி தவித்தபோது அதிலிருந்து மீண்டு வர 'லியோ' படம் எனக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. 'துருவ நட்சத்திரம்' படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஆதரவு தர யாரும் முன் வரவில்லை. அதனால் தான் நான் நடிக்க துவங்கினேன். தற்போது ஒரு வழியாக துருவ நட்சத்திரம் படத்திற்கு என் பெயரிலேயே சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளேன். இன்னும் ஒரு சில சிறிய பிரச்னைகள் மட்டுமே இருக்கின்றன. அவையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !