உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல்

'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல்

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில், ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, கேகே மேனன், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளியான வெப் சீரிஸ் 'பார்சி'. கள்ள நோட்டு பற்றிய விறுவிறுப்பான த்ரில்லர் தொடராக அமைந்து வரவேற்பைப் பெற்றது.

அந்தத் தொடர் வெளியாகி நேற்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. அதை முன்னிட்டு படத்தின் இயக்குனர்கள் ராஜ், டிகே வெளியிட்ட பதிவில், “ரவுண்ட் 2 செயலில் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்கள். தொடரின் நாயகன் ஷாகித் கபூர் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “போலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் பாகத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலையும் இயக்குனர்கள் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !