உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் வெளியானது 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

தமிழில் வெளியானது 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் மார்ச் 19ல் பான் இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கான தணிக்கை மார்ச் 19 அன்றுதான் நடந்துள்ளது. மற்ற மொழிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஏற்பட்ட கால தாமதமே இதற்குக் காரணம். தணிக்கை சான்றிதழ் பெற்றாலும் மறுநாளான நேற்று கூட படத்தை அவர்களால் வெளியிட முடியவில்லை.

இன்று மார்ச் 21 முதல் தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளில் படம் வெளியானது. டப்பிங் படமாக மற்ற மொழிகளில் வந்தாலும் படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு சிறப்பாகவே உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிந்திப் படத்திற்கு தென்னிந்திய மாநிலங்களில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !