'கிங்' படத்திற்காக ரஷ்ய சண்டை கலைஞர்களுடன் மோதும் ஷாருக்கான்
ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் படம் 'கிங்'. கடந்த 2023ல் ஷாருக்கானை வைத்து ஆயிரம் கோடி வசூலித்த 'பதான்' என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் சித்தார்த் ஆனந்த், இரண்டாவது முறையாக 'கிங்' படத்திற்காக ஷாருக்கானுடன் உடன் மீண்டும் இணைந்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஆக்சன் படமாக இது உருவாகிறது. இந்த நிலையில் ஷாருக்கான் நடிக்கும் சண்டைக்காட்சி ஒன்றை இன்னும் சில தினங்களில் நடனமாக இருக்கிறார்கள்.
இந்த சண்டைக்காட்சியில் ரஷ்யாவை சேர்ந்த 10 சண்டை கலைஞர்கள் ஷாருக்கானுடன் மோத இருக்கிறார்கள். இது குறித்த ரிகர்சல் சமீப நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த சண்டைக்காட்சிக்காக மும்பையில் உள்ள பிரபலமாக கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் மிகப்பெரிய மில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மிக நீளமான சண்டைக்காட்சியாக இது உருவாக இருக்கிறது என்றும் படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் இது முக்கிய இடம் பிடிக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது.