உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோயின் ஆனார் அர்னிகா

ஹீரோயின் ஆனார் அர்னிகா


சமூக வலைதளங்களில் பிசியாக இருப்பவர் அர்னிகா. ஜி.வி.பிரகாஷ் நடிக்க வருவதற்கு முன்பு உருவாக்கிய ஆல்பத்தில் ஆடியுள்ளார். அவருடன் ஒரு படத்தில் நடித்தார் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. தொடர்ந்து 'மணமகளே வா' என்ற தொடரில் வர்ஷா என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றார். இந்த நிலையில் அர்னிகா ஹீரோயின் ஆகியுள்ளார். முழுக்க முழுக்க இன்ஸ்ட்ரா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.ஒ' படத்தில் இவர்தான் ஹீரோயின்.

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் இந்த படத்தை மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சிவகுமார் தயாரிக்கிறார். ராஜேஷ் விகே இயக்குகிறார், வேதை பா.மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.

படத்தில் நடிப்பது குறித்து அர்னிகா கூறும்போது “இது இப்போது இருக்கும் தலைமுறையின் லவ் பற்றிப் பேசுகிற படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நான் எனக்குக் கொடுத்த சவாலான பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. திரை உலகத்திலும் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !