மலையாளம், தெலுங்கில் கயாடு பிஸி.. ஆனால் தமிழில் மார்க்கெட்?
கயாடு லோஹர் பிஸிதான், தமிழில்தான் தயங்குகிறார்கள். தமிழில் கயாடு ஹோஹர் நடித்த 'டிராகன்' சூப்பர் ஹிட். இப்போது அதர்வாவுடன் 'இதயம்முரளி' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸ். தெலுங்கில் நானியுடன் 'பாரடைஸ்' படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமசுடன் 'பள்ளிச்சட்டம்பி' படத்திலும், துல்கருடன் 'ஐ அம் கேம்' படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் சிம்புவுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கிடையில், அவர் தமிழில் அதிக படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும், ஆனால், அவர் குறித்த சர்ச்சை செய்திகள், அரசியல் செய்திகள் காரணமாக அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் தயங்குவதாக தகவல். அதனால் கயாடு, தன்னை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. பொருளாதார ரீதியில் ரொம்ப கஷ்டப்பட்டு, பல வேலைகள் பார்த்து இந்த நிலைக்கு வந்துள்ளேன்' என்று பீல் பண்ணியிருக்கிறார். தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும் கடை திறப்புவிழா, பொருள்கள் அறிமுக விழாவில் கயாடு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக தகவல்.