உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேரரசு மாதிரி ஆகிறாரா ஆர்.ஜே.பாலாஜி

பேரரசு மாதிரி ஆகிறாரா ஆர்.ஜே.பாலாஜி


இயக்குனர் பேரரசு தான் நடிக்கும் படங்களில் ஆரம்பத்தில் சின்ன ரோலில் நடித்து வந்தார். அடுத்த சில படங்களில் முன்னணி ஹீரோ நடித்தாலும், தனக்கு பில்டப் சீன் வைத்தார். 'தர்மபுரி' போன்ற படங்களில் அதிக சீன்களில் வந்தார். விஜய், அஜித், விஜயகாந்த் போன்றவர்களின் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. ஆனாலும், அவரே இயக்குனர் என்பதால் தடுக்க முடியவில்லை.

இப்போது சூர்யா நடிக்கும் 'கருப்பு' படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அவரே ஹீரோ என்பதால் கருப்பு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார். நேற்று ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் பேபி கண்ணன் என்ற கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கதைப்படி அவர் கவுரவ வேடத்தில் வருகிறாரா? பேரரசு மாதிரி ஆக்கிரமிக்கிறாரா என்பது படம் வெளியான பின்னரே தெரிய வரும். சூர்யாவுக்கு தேவை ஒரு வெற்றி படம் என்பதால், கருப்பு படத்தை அவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !