உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ், சிம்பு ரசிகர்களை ஈர்த்த 'யூத்' படக்குழு

தனுஷ், சிம்பு ரசிகர்களை ஈர்த்த 'யூத்' படக்குழு


கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்த 'யூத்' படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் கதையும், படக்குழுவினர் செயலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் சிம்பு, தனுஷ் இருவரின் ரசிகர்களை ஈர்த்துள்ளது. கதைப்படி, சிம்பு ரசிகராக வருகிறார் கென். அவர் வீட்டில் சிம்பு போஸ்டர்கள் இருக்கின்றன. அதேபோல், படத்தின் சில முக்கியமான சீன்களின் '3' படத்தில் தனுஷ் மாதிரி ஹேர்ஸ்டைலை கோதி காண்பிக்கிறார். இது, சிம்பு, தனுஷ் இருவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


'அசுரன்' படத்தில் தனுஷ் மகனாக கென் நடித்ததால், 'யூத்' பட ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டுக்கு வந்து கென்னை வாழ்த்தினார் தனுஷ். அதேபோல் படம் வெற்றி அடைந்தபின் கென் உள்ளிட்ட படக்குழுவை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டி பொக்கே கொடுத்து இருக்கிறார் சிம்பு. முதல் படத்திலேயே இப்படி பக்காவாக திட்டமிட்டு வெற்றி பெற்றுவிட்டார் கென் என்கிறார்கள் கோலிவுட்டில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !