பெண்களுக்கு ஓடிடி சரியான மேடையாக உள்ளது : பூமி பட்னேகர்
ADDED : 1 hours ago
பாலிவுட்டின் பிரபல நடிகை பூமி பட்னேகர். பெரும்பாலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் டல்டல் என்ற வெப்சீரிஸில் நடித்தார். கிரைம் கலந்த திரில்லர் தொடராக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டில்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பூமி பட்னேகர் பங்கேற்றார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்களை மையமாக கொண்ட கதையில் உருவாகும் படங்கள் குறைந்து வருகின்றன. இது வேதனையாக உள்ளது. அதேசமயம் ஓடிடி தளங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல பெண்களை மையப்படுத்தி பல வகையான வேடங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கின்றன. சினிமாவை விட ஓடிடி பெண்களுக்கு சரியான மேடையாக உள்ளது'' என்றார்.