உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஜெயலிதாவின் அம்மா சந்தியாவின் உடன்பிறவா சகோதரி

பிளாஷ்பேக் : ஜெயலிதாவின் அம்மா சந்தியாவின் உடன்பிறவா சகோதரி

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில அபூர்வமான நடிகைகள் மின்னி மறைவார்கள். சினிமா வரலாறும் அவர்களை எளிதாக மறந்து விடும், அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லட்சுமி பிரபா. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் சிரித்து மயக்கும் கவர்ச்சி வில்லியாக அறிமுகமாகி ரசிகர்களை கட்டிப்போட்டார். 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

'நல்லவன் வாழ்வான், ஏழை உழவன், குணசுந்தரி, திருடாதே, மாயா பஜார், பட்டணத்தில் பூதம், கைதி கண்ணாயிரம், சக்கரவர்த்தித் திருமகள், மர்மயோகி, திருடாதே, திகம்பர சாமியார்' போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள். 1970ல் வெளிவந்த 'அன்னை வேளாங்கண்ணிக் இவர் நடித்த கடைசிப் படம். இதில் ஜெமினி கணேசனின் அம்மாவாக நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக சசிகலா இருந்தது போன்று அவரது அம்மா சந்தியாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்தவர் இவர். சந்தியாதான் இவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தவர். ஜெயலலிதாவின் வளர்ப்பில் இவருக்கும் பங்கு உண்டு. இவர் காமெடி நடிகர் தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜாவின் சகோதரியும் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !