மதுபாலா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன்
தமிழில் 'தெய்வத்திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் வயது நந்தினியாக கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன், கடந்த நான்கு மாதங்களில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் படஹதின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டிலேயே நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.
அந்த வகையில் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் சாரா அர்ஜுன். 1940 முதல் 65 வரை ஹிந்தி சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் மதுபாலா கதாபாத்திரத்தில் தான் சாரா அர்ஜுன் நடிக்க இருக்கிறார். 'டார்லிங்ஸ்' படத்தின் மூலம் புகழ்பெற்ற ஜாஸ்மின் கே ரீன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.