உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அதிக அளவில் படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது அவர் இயக்கி இருக்கும் படத்தில் நடித்துள்ள ஒரு நடிகை ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவரை கைது செய்து எர்ணாகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. அதன் பிறகு அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணையும் நடத்தியது.

இந்த நிலையில் ரஞ்சித் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், இந்த வழக்கு இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக போடப்பட்ட பொய்யான வழக்கு. சம்பந்தப்பட்ட நடிகையின் காட்சிகளை படத்திலிருந்து வெட்டி நீக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவர் மீது புகார் அளித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சித்தை போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். எதிர் தரப்பினர் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்வாதம் செய்தாலும் கூட இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி அவருக்கு வழக்கமான சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !