உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பகவான் படத்தில் ஆரி ஜோடியான பூஜிதா

பகவான் படத்தில் ஆரி ஜோடியான பூஜிதா

தெலுங்கு நடிகையான பூஜிதா தமிழில் 'தோழா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல தமிழ் படங்களில் நடித்த அவர் கடைசியாக 'படையாண்ட மாவீரா' படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஆரி ஆர்ஜுனன் ஜோடியாக 'பகவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி.மஞ்சுநாதா தயாரிக்கும் இந்தப் படத்தை சு.காளிங்கன் இயக்கி வருகிறார். ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், ப்ரசன் பாலா இசையமைக்கிறார், பின்னணி இசையை யுவராஜ் அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும், இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படி பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன. மொத்தத்தில், “பகவான்” படம் ஒரு புதிய சிந்தனையுடன், வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !