உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேயோன்-ல் இணைந்த பாக்யஸ்ரீ : பிறந்தநாளில் வந்த அறிவிப்பு

சேயோன்-ல் இணைந்த பாக்யஸ்ரீ : பிறந்தநாளில் வந்த அறிவிப்பு

நடிகை ராதிகாவை வைத்து ‛தாய் கிழவி' என்ற படத்தை இயக்கி, முதல் படத்தையே வெற்றி படமாக கொடுத்தவர் சிவகுமார் முருகேசன். இதை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். இப்படம் வெற்றியால் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ‛சேயோன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை, கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் அதன் தெய்வங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நாயகியாக ‛காந்தா' பட புகழ் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பாக்யஸ்ரீக்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர் இப்படத்தில் நடிப்பதை பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் உடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகி உள்ளார் பாக்யஸ்ரீ. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !