மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம்
விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன், தங்கலான், வீரதீர சூரன்' என வருடத்திற்கு ஒரு படம் தவறாமல் வெளியாகி வருகிறது. அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் தற்போது மூணாறு பகுதியில் முகாமிட்டுள்ள விக்ரம், அங்குள்ள தலையார் எஸ்டேட் பகுதியில் காலை நடைபயிற்சிக்காக சென்றுள்ளார்.
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட அங்கிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய விக்ரம், 'அண்டங்காக்கா கொண்டக்காரி' என்கிற பாடலுக்கு அவர்களுடன் இணைந்து ஆடவும் செய்தார். இது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரம், ஒரு நடைபயிற்சிக்கு சென்றேன், ஒரு நினைவோடு திரும்பி வந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.