உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்!

ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்!


நடிகர் அஜித்குமார் சினிமா மற்றும் ரேஸ் என இரண்டிலும் மாற்றி மாற்றி கவனம் செலுத்துகிறார். கடந்த பல மாதங்களாக சினிமாவை கடந்து அவர் ரேசிங்கில் பிஸியாக உள்ளார். அஜித்குமாரின் இந்த நீண்ட ரேசிங் பயணத்தை 'கிளாடியேட்டர்ஸ்' என்கிற தலைப்பில் ஆவணப் படமாக ஏ.எல்.விஜய் உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப் படத்தை அஜித்குமார் ரேசிங் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த ஆவணப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த ஆவண படத்தை முதலில் இந்தாண்டு மே 1ம் தேதியன்று அஜித் குமாரின் பிறந்தநாளை தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த படம் தற்போது சற்று தள்ளி ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் காப்பியை சுமார் 1 மணி நேர 45 நிமிடங்கள் கொண்ட படமாக தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !