உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் பொதினேனி இயக்கும் படம் எந்த மாதிரியான கதை

ராம் பொதினேனி இயக்கும் படம் எந்த மாதிரியான கதை

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் பொதினேனி. டப்பிங் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். தற்போது அவர் இயக்குனராகிறார். தான் நடிக்கும் ஒரு படத்தை அவரே இயக்குகிறார்.

ராம்போ சினிமாட்டிக்ஸ் சார்பில் அவரது சகோதரர் கிருஷ்ணா பொதினேனி தயாரிக்கிறார். அவரது முந்தைய படமான 'ஆந்திரா கிங் தாலுகா' படத்தில் பாடல் 'எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. வீரா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். தனித்துவிடப்பட்ட ஒரு ஓநாயின் கதை என்று படத்திற்கு டேக் லைன் கொடுத்துள்ளனர். தனிமை, மனதின் அடி ஆழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது இந்த டேக் லைன்.

படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !