அண்ணன் சிரஞ்சீவி படத்தைத் துவக்கி வைத்த தம்பி பவன் கல்யாண்
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிக்கும் 158வது படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
பாபி கொல்லி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக நடைபெற்றது. அதில் சிரஞ்சீவியின் தம்பிகளான நாகேந்திர பிரசாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பவன் கல்யாண் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். விழாவில் தெலுங்குத் திரையுலக முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் மலையாள நடிகை அனஸ்வரா ராஜனும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.