உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா

காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு, திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படமாக ஹிந்தியில் அவர் நடித்துள்ள காக்டெயில் 2 திரைப்படம், ஜூன் 19ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி வைரலான காக்டெயில் 2 டிரைலரில் ராஷ்மிகாவின் மாடர்ன் லுக் மற்றும் துள்ளலான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் முதலில் பயந்ததாகவும், பேசாமல் இந்த படத்தில் நடிக்காமல் ஒதுங்கி விடலாமா என நினைத்ததாகவும் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் ராஷ்மிகா.

இது குறித்து அவர் கூறும்போது, “இதுவரை நான் நடித்த புஷ்பா, அனிமல், கேர்ள் பிரெண்ட் உள்ளிட்ட படங்களில் என்னிடமிருந்து சீரியஸான, எமோஷனல் நிறைந்த அல்லது அழுத்தமான நடிப்பைத்தான் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.. ஆனால் இந்த காக்டெயில் 2 படத்தில் முழுக்க முழுக்க ஜாலியான, நட்பு, காதல் மற்றும் துடிப்பு நிறைந்த ஒரு துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ, இந்த முடிவு சரியானதா என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனாலும் இது போன்ற ஒரு மாடர்ன் கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன் நடித்ததே இல்லை என்பதால் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் நடித்தேன்.. அது மட்டுமல்ல, ரசிகர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த நடிகர்களிடம் இருந்து ஏதாவது ஒரு புதிய மாற்றம் அல்லது வித்தியாசம் ஆகியவற்றைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் இந்த கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம்” என்று கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !