'கருப்பு' புகழ் இந்திரன்ஸ் - மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை'யை வெளியிடும் துல்கர் சல்மான்
90களின் துவக்கத்தில் நடிகையாக அறிமுகமாகி மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படம் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மதுபாலா. இந்த படத்தில் அவர் ஆடிப்பாடிய 'சின்ன சின்ன ஆசை' பாடல் அவரை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. தற்போது இந்த பாடல் வரிகளையே டைட்டிலாக வைத்து மலையாளத்தில் 'சின்ன சின்ன ஆசை' என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக மதுபாலாவே நடித்துள்ளார். கதையின் நாயகனாக சமீபத்தில் வெளியான கருப்பு படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் இந்திரன்ஸ் நடித்துள்ளார்.
ஜூன் 19ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முழுக்க முழுக்க இதன் கதையும் கதைக்களமும் வாரணாசியில் நடைபெறும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் வர்ஷா வாசுதேவ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.