அஜய் தேவ்கனின் 'தமால் 4' டிரைலர் வெளியீடு
அஜய் தேவ்கன், அர்ஷத் வர்ஷி, ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜாவேத் ஜாப்ரி ஆகியோர் நடித்துள்ள படம் 'தமால் 4'. தமால் சீரிஸின் நான்காம் பாகமாக உருவாகி உள்ளது. ஈஷா குப்தா, சஞ்சீதா ஷேக், அஞ்சலி ஆனந்த், உபேந்திர லிமாயே, விஜய் பட்கர் மற்றும் ரவி கிஷன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். இந்திர குமார் இயக்கி உள்ளார். அஜய் தேவ்கன், பூஷன் குமார் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் மும்பை, இமேஜிகா தீம் பார்க்கில் வெளியிடப்பட்டது. புதையலைத் தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள் தமால் பாய்ஸ். ஆனால், தங்க மலைக்கு செல்லும் பாதை அவ்வளவு எளிதானதல்ல. புதையலைத் தேடும் பயணத்தில், அவர்கள் பல வேடிக்கையான சவால்கள், எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை படத்தின் டிரைலர் பிரதிபலிக்கிறது. இதை நகைச்சுவையாகவும் படத்தில் சொல்கின்றனர்.
'தமால் 4' படம் ஜூலை 10ல் ரிலீஸாகிறது.