உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஒரு ராணுவ படத்தில் மோகன்லால் : உறுதிப்படுத்திய மேஜர் ரவி

மீண்டும் ஒரு ராணுவ படத்தில் மோகன்லால் : உறுதிப்படுத்திய மேஜர் ரவி

மலையாள திரையுலகில் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான கீர்த்தி சக்கரா, காந்தகார் உள்ளிட்ட ராணுவ படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு ராணுவப் படத்தை இயக்குகிறார் மேஜர் ரவி.. இந்த படத்திற்கு ஏற்கனவே 'பெஹல்காம்' என டைட்டில் வைக்கப்பட்டு பூஜையும் நடைபெற்று இருந்தது. ஆனால் ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பது அறிவிக்கப்படாமல் சஸ்பென்சாக இருந்தது.

இந்த நிலையில் மோகன்லால் தான் இந்த படத்தில் நடிக்கிறார் என்றும், அதுவும் அவர் ஏற்கனவே தன்னுடைய ராணுவ படங்களில் நடித்திருந்த மேஜர் மகாதேவன் என்கிற கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் தொடருகிறார் என்றும் இயக்குனர் மேஜர் ரவி தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.. கடந்த வருடம் காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது என்பது இதன் டைட்டிலை பார்க்கும் போதே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !