உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / “நான் அறிந்த மனிதர்களிலேயே..” ; ஜிவி பிரகாஷை புகழும் துல்கர் சல்மான்

“நான் அறிந்த மனிதர்களிலேயே..” ; ஜிவி பிரகாஷை புகழும் துல்கர் சல்மான்


இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜூன் 13ல் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான், ஜி.வி. பிரகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வெளியிட்ட பதிவில், நான் அறிந்த மனிதர்களிலேயே மிகவும் உண்மையான ஒருவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், “என்னுடைய இரண்டு படங்களுக்காக நீங்கள் உருவாக்கிய இசையின் மேஜிக்கை இந்த உலகம் எப்போது பார்க்கும் என்று என்னால் காத்திருக்க முடியவில்லை.. எப்போதும் உங்களுக்கு என் அன்பு சகோதரா” என்றும் குறிப்பிட்டிருந்தார் துல்கர் சல்மான். இதற்கு ஜி.வி. பிரகாஷ், லவ் யூ ப்ரோ என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். தற்போது ஒரே சமயத்தில் துல்கர் சல்மான் தெலுங்கில் நடிக்கும் இரண்டு திரைப்படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !