ஒரே வருடத்தில் சிரஞ்சீவி-ராம்சரண் இருவரும் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்திய சாதனை
கடந்த வாரம் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படம் கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளை மையப்படுத்தி வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்த இந்த படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வரை 393 கோடி ரூபாய் வசூலித்துள்ளதுடன், திரையரங்குகளில் இதன் ஓட்டம் தொடர்ந்தால் விரைவில் 500 கோடியைத் தாண்டும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் இந்த வருட துவக்கத்தில் ராம்சரணின் தந்தை நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படமும் 300 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்தது. அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனின் திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் வசூல் சாதனை செய்திருப்பது, பாக்ஸ் ஆபீஸில் மெகா குடும்பத்தின் ஆதிக்கம் ஓங்கி இருப்பதை நன்றாகக் காட்டுகிறது.