உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 37 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவின் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் 'கீதாஞ்சலி'

37 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவின் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் 'கீதாஞ்சலி'


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா கதாநாயகனாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார். தற்போது அவர் தனது 100வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், அதாவது 1989ம் ஆண்டு ஒரே ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' மற்றும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'சிவா' ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்த்தின. 'சிவா' திரைப்படம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற, 'கீதாஞ்சலி' திரைப்படம் அவரை ஒரு காதல் நாயகனாக இளம்பெண்களிடம் கொண்டு சேர்த்தது.

மணிரத்னம் தெலுங்கில் இயக்கிய முதல் படமான இதில், கிரிஜா ஷெட்டர் கதாநாயகியாக நடித்திருந்தார், மேலும் இளையராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி தற்போது 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !