உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி நடிகை சஞ்சிதா உகலே திடீர் மரணம்: சகோதரர் குற்றச்சாட்டு

ஹிந்தி நடிகை சஞ்சிதா உகலே திடீர் மரணம்: சகோதரர் குற்றச்சாட்டு


ஹிந்தியில் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சஞ்சிதா உகலே. இவர் வசூலைக் குவித்த 'ச்சாவா' படத்திலும் நடித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு ஜுன் 14ம் தேதி அவரது வீட்டில் இறந்த நிலையில் இருந்தார். அவரது இறப்பு குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதே ஜுன் 14ம் தேதிதான் 'தோனி' படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

இந்நிலையில் சஞ்சிதாவின் சகோதரர் ஆகாஷ் உகலே அளித்த பேட்டி ஒன்றில், “சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டார். அதே நாளில் என் சகோதரியும் தற்கொலை செய்துகொண்டார். நான் இப்போது உங்களுக்குக் காட்டிய இன்ஸ்டாகிராம் கணக்கில் நேற்று ஒரு 'ரீல்' (குறுகிய காணொளி) பதிவிடப்பட்டுள்ளது; அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காணொளி இடம்பெற்றுள்ளது, அத்துடன் என் சகோதரியின் சுயவிவரப் படமும் (profile picture) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துக் காவல்துறையினர் தான் விசாரிக்க வேண்டும். நான் அவளது சில நண்பர்களிடம் பேசினேன்; அப்போது, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணியில் (casting) ஈடுபட்டிருந்த சிலர் அவளைத் துன்புறுத்தி வந்ததை நான் அறிந்துகொண்டேன். அதனால்தான் என் சகோதரி மனவேதனையில் இருந்தார்..., எனத் தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !