உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கல்கி 2': சாய் பல்லவி நடிக்கிறாரா இல்லையா?

'கல்கி 2': சாய் பல்லவி நடிக்கிறாரா இல்லையா?


நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிப்பில் 2024ல் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்த சில சிக்கல் காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், “சுமதி கதாபாத்திரம் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம். தீபிகா படுகோனேவுக்குப் பதிலாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்பது யூகம்தான். கல்கியின் அம்மா தான் சுமதி. அதனால் அக்கதாபாத்திரத்தை மாற்ற முடியாது,” என்றார்.

சுமதி என்ற கதாபாத்திரத்தில்தான் தீபிகா படுகோனே முதல் பாகத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே, இப்படத்தில் ஆலியா பட் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன.

சாய் பல்லவி 'கல்கி' இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !