உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் ஷாம்

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் ஷாம்


நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து தனிக்கட்சி துவங்கி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு தமிழகத்தின் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். திரையுலகை சேர்ந்த ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வராகியுள்ள மகிழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பலரும் அவரை தலைமைச் செயலகம் சென்று சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அதே சமயம் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் முதல்வர் விஜய்யை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை கூறி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஷாம் தற்போது முதல்வர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். ஒரு துணை நடிகராக நடிகர் ஷாமின் திரைப்பயணம் துவங்கியதே விஜய் நடித்த 'குஷி' திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்ததன் மூலம் தான். அந்த வகையில் கிட்டத்தட்ட 26 வருடங்களாக விஜய்யுடன் நல்ல நட்பில் இருப்பவர் ஷாம் அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராகவும் ஷாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !