உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தது மகேஷ்பாபு படமா ? மறுக்காமல் அமைதி காக்கும் 'பெத்தி' இயக்குனர்

அடுத்தது மகேஷ்பாபு படமா ? மறுக்காமல் அமைதி காக்கும் 'பெத்தி' இயக்குனர்


சமீபத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இயக்குனர் புச்சிபாபு சனா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக சமீப காலமாகவே தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'வாரணாசி' படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, அதனை முடித்துவிட்டு புச்சி பாபு சனா இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 'பெத்தி' திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் புச்சிபாபு சனாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, அதற்கு அவர், “சரியான நேரத்தில் இதைப் பற்றிய விவரங்களை வெளியிடுவேன். காலம் எல்லாவற்றையும் சொல்லும்” என்றும் சுருக்கமாகப் பதிலளித்தார். அவர் மகேஷ்பாபு படத்தை இயக்குகிறேன் என்றோ அல்லது இல்லை என்றோ உறுதியாகக் கூறாமல் மழுப்பலாகப் பதில் கூறியிருப்பதால், இவர்களது கூட்டணியில் அடுத்த படம் உருவாவதற்கு ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம் என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !