'டாக்ஸிக்': பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய டீசர் நாளை வெளியீடு
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று டாக்ஸிக். பான் இந்திய அதிரடி ஆக்சன் படமான இதில், யஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய ஒரு டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வந்த நிலையில், அதுகுறித்த புதிய தகவலை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் யஷ். அதில், இந்த டீசர் நாளை, ஜூலை 1, 2026 அன்று காலை 11:33 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த டீசர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த டாக்ஸிக் படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணாவும், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் யஷும் இணைந்து தயாரிக்கின்றனர்.
ரவி பஸ்ரூர் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இந்த டாக்ஸிக் படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.