உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நஷ்டத்தைத் தவிர்க்கும் 'தி பாரடைஸ்' ?

நஷ்டத்தைத் தவிர்க்கும் 'தி பாரடைஸ்' ?


ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையில் நானி, கயாடு லோஹர், மோகன்பாபு மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக, கடந்த செப்டம்பர் 24ல் வெளியான தெலுங்குப் படம் 'தி பாரடைஸ்'.

இப்படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. இருந்தாலும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் விமர்சனங்களை மீறி இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினார். தெலுங்கில் மட்டுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களின் முதல் நாள் வசூலில் இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. படத்தின் முதல் வார இறுதி வசூல் சிறப்பாகவே இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

தற்போது இந்தப் படம் 160 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். இதன் மூலம் படம் 'பிரேக் ஈவன்' நோக்கி செல்வதாகச் சொல்கிறார்கள். இன்னும் சுமார் 10 கோடி வசூல் வந்துவிட்டால் படம் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் என்பதும் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது. தெலுங்கைத் தவிர இதர மொழிகளில் இன்னும் கூடுதலான வரவேற்பு கிடைத்திருந்தால் இந்தப் படம் 200 கோடி வசூலையும் பெறும் வாய்ப்பு இருந்திருக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !